Claim: கல்வி உரிமை போன்ற எதற்கும் உதவாத விஷயத்திற்கு தமிழர்கள் போராடுவதை நிறுத்த வேண்டும் – மதுரை ஆதினம்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை தமிழர்கள் இனியேனும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.

“தமிழுக்கும் தமிழின் தொன்மைக்கும் உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கிவிட்டார். இதுவே தமிழர்களுக்குப் போதுமானது. இனியாவது நிதிப் பங்கீடு, கல்வி உரிமை என எதற்கும் உதவாத விஷயங்களுக்காக போராடுவதை தமிழர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் – மதுரை ஆதீனம்” என்று அந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை இனியேனும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சாணக்யா டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது, “14 பிரதமர்கள் இருந்தார்கள், ஆனால் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலிக்க செய்யவில்லை. தேசபக்தி உடையவர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி இன்று நிரூபித்துவிட்டார்.
நரேந்திர மோடிக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு உண்டு. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் வீடு இழந்திருந்த தமிழர்களுக்கு, நரேந்திர மோடி அரசு பதவியேற்று பிறகுதான் வீடு கட்டித் தரப்பட்டது” என்று மதுரை ஆதினம் பேசியதாகவே நியூஸ்கார்ட் வெளியாகியிருந்தது.
மேலும், மதுரை ஆதினம் பேசிய வீடியோவை ஆராய்ந்தபோது அவர் எங்கேயும் கல்வி உரிமை, நிதிப்பங்கீடு குறித்து பேசியிருக்கவில்லை.
எனவே, மேற்குறிப்பிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்து வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது உறுதியாகிறது.


Conclusion
கல்வி உரிமை, நிதிப்பங்கீடு போன்ற எதற்கும் உதவாத விஷயங்களுக்கு போராடுவதை இனியேனும் தமிழர்கள் நிறுத்த வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Twitter Post From, Chanakyaa Tv, May 28, 2023
Twitter Post From, ANI, Dated May 28, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)