ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkநடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட்...

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் – News 7 தமிழ் நியூஸ்கார்ட் Fact குஷ்பு கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்தபோது பதிவிட்ட ட்வீட் குறித்த நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாகப் பரவி வருகிறது.

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“ஏன் மோடி அஞ்சுகிறார்? எது அவருடைய தூக்கத்தைக் கெடுக்கிறது? அவருக்கு வரும் கெட்ட கனவு எது? மோடிக்கு முதுகெலும்பில் நடுக்கத்தைக் கொடுக்கும் பெயர் எது? ராகுல் காந்தி என்ற பெயர் தான் அது-நடிகை குஷ்பு ட்வீட்” என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Facebook/Congressiyakkathirkupudiyauyir
Screenshot from Facebook/sing.velu.71

ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அத்வானியை அவமதித்தனரா?

Factcheck / Verification

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருந்த பாஜக குஷ்புவின் ட்வீட்டில், ”What is @narendramodi scared of?? What gives him sleepless nights?? What is his nightmare??What stops him in his track?? What sends a shiver down his spine?? Only one name @RahulGandhi..PM is obsessed with Rahulji bcoz he knows only Rahulji can set right what Modi did wrong..” என்று கடந்த ஏப்ரல் 1, 2019ஆம் ஆண்டு அவர் காங்கிரஸில் இருக்கும்போது போட்டிருந்த ட்வீட் படம் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து நியூஸ் 7 தமிழின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தபோது, “நியூஸ் 7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை” என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

எனவே, குஷ்பு கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்தபோது பதிவிட்ட ட்வீட்டே தற்போது வைரலாகி வருகிறது என்பது தெளிவாகிறது. காங்கிரஸில் இருந்து குஷ்பு, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு என்று பரவும் பழைய கருத்துக்கணிப்பு!

Conclusion

நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources Twitter Post From, Khushboo Sundar, Dated April 01, 2019 Facebook Post From, News 7 Tamil, Dated March 25, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular