ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமுதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்ற விக்ரமன் – சன்நியூஸ் நியூஸ்கார்ட்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக வடிவமைக்கப்பட்டதாகும்.

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாக சன்நியூஸ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“முதுகெலும்பு இல்லாதவர் திருமாவளவன், வி.சி.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் “முதுகெலும்பு இல்லாத திருமாவளவன் தலைமையில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது!” என்று தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணிடம் உரையாடியுள்ளார்!- வாட்ஸப்பில் உரையாடிய கிருபா முனுசாமி என்ற பெண் ஏற்கனவே விக்ரமன் மீது பாலியல் மற்றும் தற்கொலைக்கு துண்டியதாக புகார் அளித்துள்ளார்!” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன்
Screenshot from Twitter @Itz_Katti

Archived Link

Screenshot from Facebook/Rcb

Facebook Link

Screenshot from Facebook/praveen25189

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாக சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 விசிக கட்சியின் விக்ரமன் மற்றும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி இடையிலான பிரச்சினை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வைரலாகும் நியூஸ்கார்டில் உள்ள வாட்ஸப் ஸ்க்ரீன் ஷாட் பதிவும் அப்படி பகிரப்படும் ஒன்றுதான் என்பதை நம்மால் அறிய முடிந்தது. ஆனால், அதன் உண்மைதன்மை குறித்து நம்மால் அறிய முடியவில்லை.

ஆனால், இதுகுறித்து சன்நியூஸ் நியூஸ்கார்ட் வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது தொல்.திருமாவளவன் மற்றும் விக்ரமன் பற்றிய செய்தி எதுவும் குறிப்பிட்ட தேதியில் வெளியாகியிருக்கவில்லை. இதன்மூலம், அவர்களுடைய நியூஸ்கார்ட் போலவே வைரல் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

SunNews News Card
Viral News Card

எனவே, இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் கார்த்திக்கிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் வெளியிட்டது அல்ல; போலியானது” என்று நமக்கு உறுதி செய்தார். எனவே, வைரல் நியூஸ்கார்டினை சன் நியூஸ் வெளியிட்டிருக்கவில்லை என்பது நமக்கு தெளிவாகிறது.

Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?

Conclusion

முதுகெலும்பில்லாதவர் திருமாவளவன் என்று விக்ரமன் கூறியதாக சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Manoj, Sun News Digital Head, Dated July 18, 2023

Facebook Post from Sun News, Dated July 16, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular