Fact Check
சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று கூறினாரா ஒளிப்பதிவாளர் சந்தோஷ்?
Claim: சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை – ஒளிப்பதிவாளர் சந்தோஷ்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று எல்லாளன் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சீமானோடு விவாதிக்க பயந்து ஓடினான் ராவிடம் விலைபோன ஒளிப்பதிவாளர் சந்தோஷ்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
Fact Check/Verification
சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று எல்லாளன் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதாகப் பரவிய நிலையில் இதன் பின்புலத்தை ஆராய்ந்தோம்.
“பிரபாகரனுக்கு சீமான் யார் என்றே அப்போது தெரியாது… அன்று நடந்தது இதுதான்” என்பதாக எல்லாளன் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், “ சீமான் – சந்தோஷ் இடையே ஜனநாயகப்பூர்வமான, ஆரோக்கியமான விவாதத்தை நியூஸ்18 தமிழ்நாடு அலுவலகத்தில் ஒருங்கிணைக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது நியூஸ் 18 தமிழ்நாடு.
இந்நிலையிலேயே, சந்தோஷ் இந்த விவாதத்திற்கு தயாராக இல்லை என்று தெரிவித்திருப்பதாக குறிப்பிட்ட நியூஸ்கார்ட் பரவுகிறது. வைரல் நியூஸ்கார்ட் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது” என்று தெளிவுபடுத்தினார்.
Also Read: கர்ணபிரயாக் – ரிஷிகேஷுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதா?
Conclusion
சீமானோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இல்லை என்று எல்லாளன் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with, Karthigai Selvan, News 18 Tamil Nadu, Dated January 28, 2025
YouTube Video From, News 18 Tamil Nadu, Dated January 26, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)