வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

HomeFact CheckFact Check: திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று பேசினாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

Fact Check: திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று பேசினாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது – மு.க.ஸ்டாலின்
Fact: வைரலாகும் வீடியோவில் அவர் PMK என்றே பேசியுள்ளார்.

திமுக தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக வீடியோத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ADMK வும் DMK வும் தமிழ் நாட்டிற்கு அல்ல இந்தியா முழுக்க கொடுமையை செய்திருக்கு – ஸ்டாலின் “ என்பதாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Screenshot From Twitter @jeraldDraja

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா?

Factcheck / Verification

திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்தே வைரலாகும் நிலையில் அதனை கீ-ப்ரேம்களாகத் தேடியபோது நமக்கு அதுதொடர்பான செய்திகள் கிடைக்கவில்லை. எனினும், குறிப்பிட்ட வீடியோ CAA குடியுரிமைச்சட்டம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற காலகட்டத்தில் இருக்கலாம் என்பதாலும், வைரலாகும் வீடியோவில் கலைஞர் டிவி என்கிற லோகோ இடம் பெற்றிருந்ததாலும் கலைஞர் டிவியில், “CAA, குடியுரிமைச்சட்டம், ஸ்டாலின்” உள்ளிட்ட கீ-வேர்டுகள் மூலமாகத் தேடினோம்.

அதன்முடிவில், கடந்த மார்ச் 11, 2020 அன்று மண்ணடியில் CAA என்னும் குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வருகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை வீடியோ நமக்குக் கிடைத்தது. அதுவும், வைரலாகும் வீடியோவும் ஒன்று என்பது நமக்கு உறுதியானது.

அந்த வீடியோவில் 5.18இல் இருந்து அவர், “ராஜ்யசபாவில் பாஜகவிற்கு அதிகப் பெரும்பான்மை கிடையாது. திராவிட முன்னேற்றக்கழக ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவருமே குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளோம். ஆனால், அதிமுகவின் 10 உறுப்பினர்கள், அதிமுக கூட்டணியில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் இணைந்து அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த 11 ஓட்டுகளும் ராஜ்யசபாவில் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்த சட்டமே நிறைவேறியிருக்காது; ஆனால், ஓட்டு போட்டார்கள். ஆக, அதிமுகவும் (ADMK) பாமகவும் (PMK) இணைந்து நமக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதிற்குமே கொடுமை செய்திருக்கிறார்கள்” என்பதாகப் பேசியிருந்தார்.

அவர், பாமக என்று ஆங்கிலத்தில் உச்சரிப்பது கலைஞர் டிவி வீடியோவில் தெளிவாக உள்ளது. ஆனால், வைரல் வீடியோவில் அவர் DMK என்று கூறியதாகப் போலியாக பரவி வருகிறது.

CAA எதிர்ப்பு போராட்ட நிகழ்வு வீடியோவில் திமுக மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் என்றே DMK குறித்து பெரும்பான்மையாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check: அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து விவரத்தை அண்ணாமலை வெளியிட கேட்டாரா மாணவி ஒருவர்?

Conclusion

திமுக இந்தியா முழுமைக்கும் கொடுமை செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது; அவர் PMK என்றே பேசியுள்ளார் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Kalaingar Tv News, Dated March 11, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular