Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தப்பின் பல திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி உள்ளது. இதில் முக்கியமானது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம்.
ஆனால் தற்போது நிதிநிலை பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் இவ்வாறு கூறினாரா என்பதை உறுதி செய்ய அவரது அதிகாரப் பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் பொது ஊடகங்களிலும் இதுக்குறித்து தேடினோம். இதில் அமைச்சர் மேற்கண்ட தகவலை கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதன்பின் ஏபிபி நாடு ஊடகத்தின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். ஏபிபி நாடு வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஏபிபி நாட்டின் ஆசிரிரை மனோஜ் பிரபாகரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தார். மேலும் இவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்திருந்தார்.
Also Read: கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்றாரா துரைமுருகன்?
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
ABP Nadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2025