Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணி களம் காண உள்ளது.
இந்நிலையில் “கூட்டணி கட்சிகளால் எந்த பயனும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அத்தனை வார்டுகளும் வீண்தான். அவர்களால் எங்களுக்கு எந்த ஓட்டும் வராது. எங்களுடைய ஆதரவில்தான் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்றாரா துரைமுருகன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தனர்.
இதனையடுத்து வைரலாகும் செய்தி குறித்த உண்மையறிய வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான எம்.பி கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட செய்தி போலியாக பரப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளால் பயனில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thanthi TV
D.M.Kathir Anand MP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 11, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2025