திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிகரித்து வரும் கொரோனோ தாக்கத்தின் விளைவாக பண்டிகைகளை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தடையை மீறி விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தமிழக அரசு சார்பாக பறிமுதல் செய்து, அவற்றை குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact Check/Verification
திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அதில் விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் நடக்கவில்லை, அது ஆந்திராவின் குண்டூர் பகுதியில் நடந்த நிகழ்வு என்பதை நம்மால் அறிய முடிந்தது.

தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி குண்டூரில் சிலர் விநாயகர் சிலைகளை விற்றுள்ளனர். இதனால் அதிகாரிகள் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த சிலைகளை பறிமுதல் செய்து அவற்றை குப்பை வண்டியில் எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
Conclusion
திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக கூறி வைரலாகும் புகைப்படம் உண்மையில் ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் எடுக்கப்பட்டதாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)