நடிகை மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடிகையும் மாடலுமான மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி அவரை கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மேலும் மூன்று வழக்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளிலிருந்து ஜாமீன் பெற மீரா மிதுன் தொடர்ந்து முயற்சித்து வருகின்றார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில், சீமான் போன்ற பொறுக்கிகளை எல்லாம் வெளியில் நடமாடவிடுகிறீர்கள் எனக்கு மட்டும் ஜாமீன் தர மறுப்பதா? என்று மீரா மிதுன் நீதிபதியிடம் கேட்டதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
Fact Check/Verification
மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
மீரா மிதுன் மீது நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்குக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் கடந்த வெள்ளியன்று ஆஜரானார்.
அப்போது தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுக்குறித்த செய்தி புதிய தலைமுறை உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்காணப்படும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவரும், இது பொய்யான நியூஸ்கார்ட் என்பதை நமக்கு உறுதி செய்தனர்.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்றாரா பாஜக எம்.பி. கணேஷ் சிங்?
Conclusion
நடிகை மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)