நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் அதிமுக உள்ளேயும், காதை சொறிந்தால் வெளிநடப்பும் செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக அதிமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், அவர்களது வெளிநடப்பு குறித்து திமுக அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், பாஜகவின் “பாஜகவின் நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் சட்டப்பேரவையில் உள்ளே இருக்க வேண்டும் காதை சொறிந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டும். இதுதான் அதிமுகவினருக்கு டெல்லி இட்ட உத்தரவு” என்று பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் அதிமுக உள்ளேயும், காதை சொறிந்தால் வெளிநடப்பும் செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு நியூஸ் 7 தமிழ் செய்தித்தளத்தின் கார்டு என்பதால், உண்மையில் அந்த கார்டு டெம்ப்ளேட் நியூஸ் 7 தமிழில் வெளியாகியுள்ளதா என்று ஆராய்ந்தபோது, “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க முடியாததால் அதிமுகவினர் வெளிநடப்பு..அவை முன்னவர் துரைமுருகன்” என்கிற நியூஸ் கார்டினை எடிட் செய்தே குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இது எடிட் செய்யப்பட்டது என்பதை நியூஸ் 7 தொலைக்காட்சி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Conclusion:
நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் அதிமுக உள்ளேயும், காதை சொறிந்தால் வெளிநடப்பும் செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசியதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/photos/4986235238105311
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)