இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

இலங்கையில் தற்சமயம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை மக்கள் ஆங்காங்கே போராடி வரும் நிலையில், “இலங்கையை விட இந்தியாவில் விலைவாசி இருமடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இந்தியர்கள், குறிப்பாக பெரும்பான்மை இந்துக்கள் தேச நலனுக்காக பொறுமை காக்கின்றனர்” என்று என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்ளங்களில் பரவி வருகின்றது.



Also Read: வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், உண்மையிலேயே அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில், “இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன்; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போரிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார்” என்று கோத்தபய ராஜபக்ச கூறியதாக தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் மேற்கண்ட நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


தந்தி தொலைக்காட்சியும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளது.
Also Read: எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கின்றதா?
Conclusion
இந்திய விலைவாசி இலங்கையை விட இருமடங்கு உயர்ந்துள்ளது என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என நம் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Source
Thanthi TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)