Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை
Fact: வைரலாகும் படத்திலிருப்பது பல்கேரியா நாட்டின் சாலையாகும்.
“இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்து விபத்து நடந்து விடாமல் இருக்க மோடி கண்டுபிடித்து குஜராத்தில் செயல்படுத்தப் பட்ட இரண்டு வழிச்சாலை” என்று குறிப்பிட்டு சாலை ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண்கள் தெரிவித்தனரா?
Fact Check/Verification
குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என்று குறிப்பிட்டு சாலை ஒன்றின் படம் வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் அப்படமானது பல்கேரியா நாட்டின் டிராகளேவ்ட்சி(Dragalevtsi) பகுதியில் எடுக்கப்பட்டது என குறிப்பிட்டு பல்கேரிய ஊடகமான blitz.bg தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களும் இச்சாலை குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சாலையானது பல்கேரிய நாட்டின் சாலை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடியதில் zasofiafoundation எனும் பயனர் ஐடியை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இச்சாலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் படத்துடன் அச்சாலையின் வேறு சில படங்களும் பகிர்ந்து, அச்சாலையானது டிராகளேவ்ட்சி பகுதியில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது
Also Read: எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்றாரா செல்லூர் ராஜு?
Conclusion
குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என்று குறிப்பிட்டு வைரலாகும் சாலை உண்மையில் குஜராத்தில் போடப்பட்ட சாலை அல்ல; அது பல்கேரியா நாட்டின் டிராகளேவ்ட்சி பகுதியில் போடப்பட்ட சாலையாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post by zasofiafoundation on October 17, 2023
News Report by blitz.bg on October 14, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.