கெட் அவுட் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக கட் அவுட் ஸ்டாலின் என்று எழுத்துப்பிழையுடன் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் தமிழ் ஒயர் எனும் இணைய ஊடகத்தில் “தப்பு பண்ணிட்டியே சிங்காரம்..! #GetOutStalin வெளுத்து வாங்கும் பாஜக..!” என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இதே படத்தை பயன்படுத்தியிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று சரியான வார்த்தையே இருந்தது. எவ்வித எழுத்துப்பிழையும் இல்லை.

தொடர்ந்து தேடுகையில் திமுக – பாஜகவினருக்கும் இடையே போஸ்டர் சண்டை நடந்து வருவதாக தினமலர் யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது, அச்செய்தியிலும் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படத்திலும் எழுத்துப்பிழை இல்லாமல் சரியான வார்த்தையே போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் பாஜகவினர் எழுத்துப்பிழையுடன் போஸ்டர் ஒட்டியதாக பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்..


Also Read: ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?
Conclusion
‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று பாஜகவினர் போஸ்டர் ஒட்டியதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Tamilwire.in, Dated February 21, 2025
Report by Dinamalar, Dated February 21, 2025