திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkசென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்தாரா?

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்தார்.

Fact: வைரலாகும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதாகும்.

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக வைரலாகும் வீடியோத்தகவல்

Twitter Link | Archived Link

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக வைரலாகும் வீடியோத்தகவல்

Archived Link

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக வைரலாகும் வீடியோத்தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்றாரா ஸ்டாலின்?

Fact Check/Verification

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் இவ்வீடியோ குஜராத்தின் கட்சி பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறி ஜூன் 30, 2023 அன்று ஜீ 24 கலக் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் வேறு சில நிறுவங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இவ்வீடியோவானது குஜராத்தில் எடுக்கப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?

Conclusion

சென்னை மழையில் ஒருவர் தெர்மோகோல் பயணம் செய்ததாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Zee 24 Kalak, Dated June 30, 2023|
Report from Zee News India, Dated July 02, 2023
Report from Punjab Kesari, Dated July 02, 2023
Report from ABP Live, Dated July 01, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular