ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact Checkநேபாள விமான விபத்து என்று பகிரப்படும் பழைய, தவறான புகைப்படங்கள்!

நேபாள விமான விபத்து என்று பகிரப்படும் பழைய, தவறான புகைப்படங்கள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நேபாள Yeti ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. பல்வேறு செய்தி ஊடகங்களும் தற்போதைய நேபாள விமான விபத்து புகைப்படங்கள் என்பதாக பழைய மற்றும் தவறான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றன.

நேபாள தலைநகர், காத்மாண்டுவில் இருந்து பொக்ராவிற்கு 72 பயணிகளுடன் ஞாயிறு (15/01/2023) காலை கிளம்பிய Yeti ஏர்லைன்ஸ் விமானம் பயங்கர விபத்துக்கு உள்ளானது. அதில் பயணம் செய்தவர்களில் கிட்டதட்ட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக செய்திகளும் சமூக வலைத்தளப் பதிவுகளும் வெளியாகிய நிலையில் அதில் பழைய மற்றும் தவறான புகைப்படங்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

Screenshot From News18 Tamil
Screenshot from Vikatan

Archived Links: Vikatan, OneIndia Tamil, Thanthi TV, Kamdhenu , News 18 Tamil

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வீட்டை காலி செய்யாத காரணத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா?

Fact check/Verification

நேபாளத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக பரவும் புகைப்படங்களின் உண்மையறிய இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவது புகைப்படம்:

ராணுவ வீரர் ஒருவர் விமானத்தின் சிதைந்த பாகத்தின் அருகில் நிற்பது போன்று வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த செப்டம்பர் 28, 2012 ஆம் ஆண்டே ராய்ட்டர்ஸ் பக்கத்தில் “A Nepalese police officer stands in front of the wreckage of a Dornier aircraft, owned by private firm Sita Air, at the crash site in Kathmandu September 28, 2012.” என்று இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

இரண்டாவது புகைப்படம்:

விமானம் சிதைந்து கிடப்பதாகப் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தபோது CNN கடந்த மார்ச் 12, 2018ல் வெளியிட்டிருந்த “49 dead in plane crash at Nepal’s Kathmandu airport.” என்கிற செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், இப்புகைப்படம் “At least 49 people were killed when a plane approached the runway from the wrong direction, crashed and burst into flames while landing at Kathmandu’s Tribhuvan Airport in Nepal…Flight BS 211, which belongs to US-Bangla Airlines, a privately owned Bangladeshi carrier, was flying from Dhaka, Bangladesh, police spokesperson Manoj Neupane said.” என்கிற செய்தியுடன் இடம்பெற்றுள்ளது. மார்ச் 12, 2018 Daily Mail செய்தியிலும் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Screenshot From Dailymail

மூன்றாவது புகைப்படம்:

சிதைந்த விமானத்தின் எச்சங்கள் இடம்பெற்றுள்ள இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது “காத்மாண்டு போஸ்ட்” கடந்த மே 20, 2022 வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது. “Rescuers pulled out 14 bodies from the crash site of Tara Air and have been scouring the area for the remains of the others, according to rescuers. Pieces of wreckage of the passenger plane that crashed on Sunday morning were found at 14,500ft in Sano Sware Bhir of Thasang in Mustang district in northwestern Nepal, after nearly 20 hours since the plane went missing, the Nepal Army…The Twin Otter aircraft of Tara Air with 22 people onboard, including three members of the crew, had slammed into a mountain.” என்கிற செய்தியுடன் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Screengrab from The Kathmandu Post website

Also Read: பாகிஸ்தான் உணவுப் பஞ்சத்தின் தற்போதைய நிலை என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

நேபாளத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக வைரலாகும் புகைப்படங்களில் பலவும் பழையவை மற்றும் தவறானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
Photos By Reuters
Report By vijesti.me, Dated September 28, 2012
Report By CNN, Dated March 12, 2018
Report By Daily Mail, Dated March 12, 2018
Report By The Kathmandu Post, Dated May 30, 2022
Report By Money Control, Dated May 30, 2022

Report By, Newschecker English, Dated January 15, 2023
Report By, NBC News, Dated March 12, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular