இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதியதாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிகழ்வில் பிரதமர் மோடியிடம் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் பலரும் தற்கொலையை நாடியுள்ள நிலையில், நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஆனால், ஒன்றிய அரசில் ஆளும் பாஜக இதுகுறித்து மவுனம் சாதிக்கிறது.
இந்நிலையில், “இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது. ஒன்றிய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு ஏன் மாற்றக்கூடாது என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இது மக்களை சென்றடைய வேண்டும்” என்கிற கருத்தினை தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியை பாதுகாக்க தவறுதலாக பிச்சைக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டாரா?
Fact check/Verification
இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பிபிசி செய்திகளின் நியூஸ் கார்டில் குறிப்பிட்ட செய்தி பரவுவுதால் அப்படி ஏதேனும் செய்தி பிபிசியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்போது, “இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட திமுக ஆட்சிக்கு திரும்ப முடியாது. மாநில பட்டியலில் உள்ள சட்டம், ஒழுங்கை மத்திய பட்டியலுக்கு ஏன் மாற்றக்கூடாது என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இது மக்களை சென்றடைய வேண்டும்” என்று ஹெச்.ராஜா கரூரில் பேசிய கருத்துக்கள் நியூஸ் கார்டாக வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அந்த கார்டினையே எடிட் செய்து வைரலாகும் நியூஸ் கார்டினை உருவாக்கியிருக்கின்றனர்.குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை ஹெச்.ராஜா தரப்பிலும் உறுதி செய்து கொண்டோம்.

Fake Card

Original Card
கரூரில் ஹெச்.ராஜா பேசிய காணொளியையும் இங்கே இணைத்துள்ளோம். எனவே, வைரலாகும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
Conclusion
இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்று தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)