Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பேரனின் மனைவியை கவர்ந்து சென்ற முதியவர் என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ ஒரு சித்தரிப்பு வீடியோவாகும்.
இந்த அற்புதமான சம்பவத்தை கேளுங்கள்..
“இந்த முஸ்லீம் சிறுவன் தனது இளம் மனைவியை தனது வயதான தாத்தாவிடம் ‘ஹலாலா’ (இஸ்லாமிய கலாச்சாரத்தின்படி பெரியவர்களுடன் ஒரு இரவு உடலுறவு) செய்வதற்காக அனுப்பினான். தாத்தா தனது பேரனின் இளம் அழகான மனைவியை மிகவும் விரும்பினார், அவர் தனது வயதான மனைவியை விவாகரத்து செய்தார்.
இஸ்லாம் சொல்வதை முழுமையாகப் பின்பற்றிய தாத்தா, ‘ஹலாலா’க்குப் பிறகு தனது பேரனின் அழகான இளம் மனைவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டார் தாத்தா.
இளம் அழகான மனைவியும் துரோகியாக மாறினார். வயதான கணவருக்கு பாடம் புகட்ட மனைவியும் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காமல், 70 வயதினருடன் செய்த ‘ஹலாலா’வை ரசிக்கிறார்.
இதுவே அழகான இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் இதுவே அவர்களின் மதத்தின் அழகு. இதனால் தான் ஆண்கள் எந்த வயதினராக இருந்தாலும் இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை”
என்று குறிப்பிட்டுவீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பேரனின் மனைவியை கவர்ந்து சென்ற முதியவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோத்தகவலில் ஹலாலா எனும் முறை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் இஸ்லாமிய மதத்தில் ஏற்கனவே விவாகரத்து செய்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால், மனைவி வேறு ஒருவரை மணந்து அவருடன் விவாகரத்து பெற்ற பின்னரே மீண்டும் தன் முதல் கணவரை மணக்க முடியும். இம்முறைக்கே ஹலாலா திருமணம் என்று பெயராகும்.
இதனையடுத்து ஹலாலா முறைப்படி திருமணம் நடந்ததாக பரப்பப்படும் வீடியோ குறித்து தேடினோம். அதில் இவ்வீடியோ குறித்து நியூஸ்செக்கர் பெங்காலியில் கடந்த வருடமே இவ்வீடியோ ஒரு புனைவு வீடியோ என்று விளக்கி இருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவானது பங்களாதேஷை அடிப்படையாக கொண்ட ஷர்மின் ஷகில் எனும் யூடியூப் பக்கத்தில் 25 நவம்பர் 2022 அன்று பதிவிடப்பட்டுள்ளது. இவ்வீடியோ ஒரு பொழுதுபோக்கு வீடியோ என்று அவ்வீடியோவிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுத்தவிர்த்து வேறு சில வீடியோக்களும் இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Also Read: கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
பேரனின் மனைவியை கவர்ந்து சென்ற முதியவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Next IAS Report
Sharmin Shakil YouTube Channel
Newschecker Article
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2024