ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண் அளித்த பேட்டி

Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் ஐஎஸ்ஐஎஸ் மூலமாக கடத்தப்பட்ட பெண் குறித்து பேசும் ஈராக் பெண் எம்பி வியான் தாக்கில்.

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண் அளித்த பேட்டி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

” ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது :மூன்று நாட்கள் அவர்கள் கஸ்டடியில் இருந்தேன் உணவு உட்பட எதுவுமே கொடுக்கவில்லை .பிறகு கொஞ்சம் உணவும் சமைத்த மாமிசமும் கொண்டு வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன் அதன் பிறகு தான் சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தயின் மாமிசம் என்று சொன்னார்கள். ஒரு பத்து வயது பெண் குழந்தையை கற்பழித்து அவளை பெற்றோர் முன் வைத்து கொன்று விட்டார்கள் . இவர்களைத்தான் நல்லவர்கள் என்று I.N.D.I.A கூட்டணி ஆதரிக்கிறது இவர்களுக்கு வாக்களித்தால் நாளை நமது பாரத மக்களுக்கும் இதே கொடூரமான நிகழ்வு தான் நடக்கும்.” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

ஹமாஸ்
Screenshot from X @Johni_raja

Archived Link

Screenshot from facebook/vetrivel.ramakirshnan

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

Fact Check/Verification

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண்ணின் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூன் 27, 2017 அன்று Daily Mail வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. ”Yazidi sex slave unwittingly ATE her one-year-old son after ISIS fanatics COOKED the child and served it with rice after starving her for three days, Iraqi MP claims” என்று அந்த செய்தி கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டிருந்தது.

ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட யாசிதி அடிமைப் பெண் மூன்று நாட்கள் உணவின்றி வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவரது சொந்த ஆண் குழந்தையையே சமைத்த ISIS தீவிரவாதிகள் அதனை அவருக்கு உணவாகக் கொடுத்ததாகவும் ஈராக் பெண் எம்பியும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தால் கடத்தப்படும் யாசிதி பெண்களுக்காகவும் குரல் கொடுக்கும் வியான் தாக்கில் எகிப்திய டிவி சேனலான எக்ஸ்ட்ரா நியூசிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட அந்த வீடியோவை எடுத்தே ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்ணின் பேட்டி என்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

Conclusion

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவரது சிறு குழந்தையின் மாமிசத்தை சாப்பிட வைக்கப்பட்ட பெண்ணின் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Daily mail, Dated June 27, 2017


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular