Fact Check
“பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா”; வைரலாகும் நாராயணன் திருப்பதியின் டிவீட் உண்மையானதா?
பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை? என்று நாராயணன் திருப்பதி டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

திமுகவின் மூத்தத் தலைவரும் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு இவரின் அபிமானிகளும், தொண்டர்களும் #HBDKalaignar98, #KalaignarForever உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டிவிட்டர் தளத்தில் #HBDKalaignar98 எனும் ஹேஷ்டேகுக்கு கீழ், “People remember the late politician and writer Muthuvel Karunanidhi, known to his supporters as Kalaignar, on the anniversary of his birth” எனும் உரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,
“பாரதம் காக்கும் நம் பாரத பிரதமர் அவர்களுக்கு இந்த ட்விட்டர் என்றாவது இது போன்ற உரை எழுதியதா? ஏன் #kalaingar98 க்கு மட்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழாமல் இல்லை.”
என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாக உள்ளது.”
இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/iNZtD

Archive Link: https://archive.ph/yKDIo

Archive Link: https://archive.ph/vATdd
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை? என்று நாராயணன் திருப்பதி அவர்கள் பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.
இவ்வாறு தேடியதில் நாராயணன் திருப்பதி அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் நாராயணன் திருப்பதி பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், நாராயணன் திருப்பதி அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது நாராயணன் திருப்பதி அவர்கள் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
நாரயணன் திருப்பதி அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Narayanan3 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @narayanatirupa3 என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Parody(போலி)கணக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர்களின் புரிதலுக்காக நாராயணன் திருப்பதி அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஏற்கனவே இதே போன்று நாராயணன் திருப்பதி அவர்களின் பெயரில் இயங்கிய மற்றொரு போலிக் கணக்கிலிருந்து காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதை நாராயணன் திருப்பதிதான் பதிவிட்டார் என்று மற்றவர்கள் நம்பியதால் அதுக்குறித்து விரிவாக ஆய்வு செய்து, அக்கருத்தை நாராயணன் திருப்பதி பதிவிடவில்லை, அவர் பெயரில் இயங்கிய போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: காயத்ரி ரகுராம் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு பதிவிட்டாரா?
Conclusion
நாராயணன் திருப்பதி அவர்கள், “பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்..
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Imposter
Our Sources
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)