வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeCoronavirusஉலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா?

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதாக வைரலாகும் பதிவு

கொரோனா பரவலின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தொடர்ந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில்தான் போடப்பட்டுள்ளது எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதாக வைரலாகும் பதிவு - 1

Archive

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதாக வைரலாகும் பதிவு - 2

Archive

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சீமான், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலி சமூக வலைத்தள கணக்குகள் குறித்த செய்திக்கு பயன்படுத்தப்பட்டதா?

Fact Check/Verification

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய உரிய கீவேர்டுகளைப் பயன்படுத்தி இதுகுறித்து கூகுளில் தேடினோம்.

அந்த தேடலில் இத்தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி இதுவரை 32.90 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை
Source: mygov.in

ஆனால் இந்த எண்ணிக்கை உலகத்திலேயே அதிகம் எனும் தகவல் தவறானதாகும். ஏனெனில் சீனாவில் இந்தியாவை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீனாவில் 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

உலக அளவில் தடுப்பூசி போட்டவர்கள் குறித்த அட்டவணை
Source: Newyork Times
Source:OurWorldindata.Org

Also Read: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அதிமுக கட்சியை யானையின் சாணி என்று விமர்சனம் செய்தாரா?

Conclusion

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Newyork Times: https://www.nytimes.com/interactive/2021/world/covid-vaccinations-tracker.html

MyGov.in: https://www.mygov.in/covid-19

Our World in Data: https://ourworldindata.org/covid-vaccinations

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular