Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இந்தியாவில் இந்து மதவாதிகள் இஸ்லாமிய முதியவரின் தாடியை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினர்.
Fact: வைரலாகும் வீடியோவுக்கும் இந்தியாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அச்சம்பவம் சூடான் நாட்டில் நடந்ததாகும். சூடானின் உள்நாட்டு அமைப்பான ரேப்பிட் செக்யூரிட்டி ஃபோர்சஸ் (Rapid Support Forces – RSF) அதிகாரியால் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
“இந்தியா வல்லரசு ஆயிடுச்சு… ஆரிய வந்தேறி பார்ப்பனியம் எந்த அளவிற்கு மதவெறியை ஊட்டி வளர்த்திருக்கிறது பார்த்தீர்களா…” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் இஸ்லாமிய முதியவர் ஒருவரின் தாடியை பிடித்து இழுத்து மறொருவர் அவமானப்படுத்துவதாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
இந்தியாவில் இந்து மதவாதிகள் இஸ்லாமிய முதியவரின் தாடியை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக பரப்பப்படும் வீடியோவில் கறுப்பினத்தை சார்ந்தவர்கள் இருப்பதை காண முடிந்தது.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் சூடான் டிரிபியூன் எனும் இணைய ஊடகத்தில் ‘RSF violence campaign in Al Jazirah state claims 50 lives in Al-Kamelin’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் வீடியோவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. சூடானின் அல் ஜஸிரா பகுதியில் RSF அதிகாரியால் அம்முதியவரின் தாடி இழுக்கப்பட்டு அவமானப்படுத்தபட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் சூடான் டிரிபியூன் எக்ஸ் பக்கத்திலும் வைரலாகும் வீடியோ பகிரப்பட்டு, மேற்கூறிய அதே கருத்தை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது, அவ்வீடியோவில் அந்த RSF அதிகாரி அரபிக் மொழியில் பேசுவதை கேட்க முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் வேறு சில ஊடகங்களிலும் இச்சம்பவம் சூடான் நாட்டில் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்
தொடர்ந்து சூடானின் ரேப்பிட் செக்யூரிட்டி ஃபோர்சஸ் குறித்து தேடுகையில், அந்த அமைப்பு முன்னர் சூடான் அரசுக்காக வேலை செய்த அமைப்பு என்றும், பின்னர் அரசை எதிர்த்து நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி அரசுக்கு எதிராக செயல்படுகின்றது என்றும் அறிய முடிந்தது.
Also Read: இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
இந்தியாவில் இந்து மதவாதிகள் இஸ்லாமிய முதியவரின் தாடியை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை.
அச்சம்பவம் சூடான் நாட்டில் நடந்ததாகும். சூடானின் உள்நாட்டு அமைப்பான ரேப்பிட் செக்யூரிட்டி ஃபோர்சஸ் (Rapid Support Forces – RSF) அதிகாரியால் அப்பெரியவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report By Sudan Tribune
Report By Sudan Tribune, Dated October 26, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
May 5, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2024