செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024

HomeFact CheckFact Check: அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் அரிதாக இந்த வருடம் தோன்றிய செங்கோல் என்று பரவும்...

Fact Check: அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் அரிதாக இந்த வருடம் தோன்றிய செங்கோல் என்று பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அமர்நாத் குகையில் இம்முறை ஈசனுடன் இணைந்து செங்கோலும் உருவாகி உள்ளது.

Fact: வைரலாகும் தகவல் தவறாகப் பரவி வருகிறது. 

அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் இந்த வருடம் ஈசனுடன் இணைந்து தோன்றிய செங்கோல் என்று புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“அமர்நாத் குகையில் இம்முறை ஈசனுடன் இணைந்து செங் கோலும் உருவாகி உள்ளது! அரிய காட்சி” என்று இந்த புகைப்படச் செய்தி பரவி வருகிறது.

அமர்நாத் சிவலிங்கத்திற்கு
Screenshot from Twitter @p_nikumar

Archived Link

Screenshot from Facebook/praveen.bjp.986

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் இந்த வருடம் செங்கோலும் தோன்றியுள்ளதாக பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

அமர்நாத் பனிலிங்கமானது மே முதல் ஆகஸ்ட் வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீரின் அதீத குளிர்நிலையால் அமர்நாத் குகை கோயில் பகுதியில் உருவாகும் stalagmite வகையிலான பனியாலான சுயதோற்றமாகும்.

அவ்வகையில், இந்த வருடமும் அமர்நாத் பனிலிங்கம் உருவாகி வருகின்ற நிலையில் யாத்திரையும் துவங்க உள்ளது. இந்நிலையில், இந்த வருடத்திற்கான அமர்நாத் பனிலிங்கத் தோற்றம் செய்திகளில் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த வருடம் பனிலிங்கத்துடன் இணைந்து செங்கோலும் முதன்முறையாக தோன்றியுள்ளதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்து ஆராய்ந்தோம். நம்முடைய ஆய்வில், அமர்நாத் பனிலிங்கம் புற்றுப்பாறையாக தோன்றும்போது அதனைச்சுற்றியும் பனி உறைவு பாறைகள் ஏற்படுவது புதிதல்ல; அது இந்த வருடம் புதியதாக நடைபெற்றதல்ல என்று அறிய முடிந்தது.

Jammu Links News வெளியிட்டுள்ள கடந்த 2021ஆம் ஆண்டு அமர்நாத் பனிலிங்க புகைப்படங்களிலும் சிவலிங்கத்திற்கு அருகில் குச்சி போன்ற பனிப்பாறை உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இதுகுறித்த மேலும் சில செய்திப்பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு Zeenews வெளியிட்டுள்ள “Devotees claim they visited Amarnath cave two months before official yatra begins, share first pictures of shivling” என்கிற கட்டுரையிலும் அமர்நாத் பனிலிங்கம் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும், பனிலிங்கத்துடன் தற்போது செங்கோல் என்று குறிப்பிடப்படும் குச்சி வடிவிலான பனிப்பாறை உருவாகியுள்ளதைக் காண முடிகிறது.

ABP செய்தி ஊடகம் கடந்த 2022ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை குறித்து வெளியிட்டுள்ள செய்தியிலும் அமர்நாத் பனிலிங்கத்துடன் இதே போன்ற பனிப்பாறை அமைப்பு காணப்படுகிறது.

இதிலிருந்து, அமர்நாத் பனிலிங்கம் உருவாகும்போது அதனைச்சுற்றிலும் குளிரால் பனி உறைந்து மேலும் இதுபோன்ற படிகப்பாறைகள் தோன்றுவது புதிதல்ல; ஏற்கனவே பலமுறை உருவாகியுள்ளன என்பதும், தற்போது உருவாகியுள்ள அதே போன்ற பனிப்பாறை தோற்றம் செங்கோலுடன் தொடர்பு படுத்தி தவறாக பரப்பப்படுகிறது என்பதும் உறுதியாகிறது.

Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?

Conclusion

அமர்நாத் சிவலிங்கத்திற்கு அருகில் இந்த வருடம் செங்கோலும் தோன்றியுள்ளதாக பரவும் புகைப்படச் செய்தி தவறாக தொடர்பு படுத்தப்பட்டு பரவுகிறது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from, ABP News, Dated May 17, 2022

Report from, Zee News, Dated April 29, 2019
Twitter Post From, Rising Kashmir, Dated June 03, 2023
Twitter Post From, JAMMU LINKS NEWS, Dated April 18, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular