திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2024
திங்கட்கிழமை, அக்டோபர் 21, 2024

HomeFact Checkசென்னை Air Show-ல் பாமக கொடி வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதா?

சென்னை Air Show-ல் பாமக கொடி வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சென்னை ஏர்ஷோவில் பாமக கொடி
Fact: வைரலாகும் வீடியோ ருமேனியா நாட்டில் நடைபெற்ற ஏர்ஷோ காட்சியாகும்.

சென்னை Air Show-ல் பாமக கொடி விமானம் மூலமாக வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”இவனுங்க வேற சாகசம் சொல்லிட்டு பாமக கட்சி கொடியை பறக்க விடறாங்க. அதுவும் திராவிட முதலமைச்சர் முன்னால்” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @rajarajan060492

X Link/Archived Link

Screenshot from X @pattali32

X Link/Archived Link

Screenshot Facebook/PandrutiSuresh

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.    

Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

சென்னை Air Show-ல் பாமக கொடி விமானம் மூலமாக வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது “Three explosive colors and a magnificent show, in perfect balance. Heliforce, Hungary.” என்று வெளியாகியிருந்த சமூக வலைத்தளப்பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் இடம்பெற்றிருந்த புகைப்படம் வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சியுடன் ஒத்துப்போனது.

தொடர்ந்து, செப்டம்பர் 01 அன்று FotostefanRo என்கிற யூடியூப் பக்கத்தில் ”Bucharest International Air Show MI 2 Heliforce” என்று வெளியாகியிருந்த வீடியோவில் குறிப்பிட்ட வைரல் வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பான புகைப்படம் புக்கரெஸ்ட் 2024 விமான சாகச நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும் இந்த சாகச நிகழ்வு தொடர்பான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?

Conclusion

சென்னை Air Show-ல் பாமக கொடி விமானம் மூலமாக வண்ணங்களால் பறக்கவிடப்பட்டதாக பரவும் வீடியோ ருமேனியா நாட்டில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Report By Bias Aero
YouTube Video By FotostefanRo, Dated September 01, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular