ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”உருப்படியா ஒரு வேட்புமனு தாக்கல் செய்ய வக்கில்ல. இவங்கதான் நாட்டை தூக்கி நிறுத்தபோறாங்களாம்” என்பதாக அந்த புகைப்படத்தகவல் வைரலாகிறது.

Screenshot From Twitter @Jaisajoints
Screenshot From Facebook/Bapeen Leo Joseph

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Also Read: கடலூர்-புதுச்சேரி புதிய சாலை என்று பகிரப்படும் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே புகைப்படங்கள்!

Fact Check/Verification

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படச் செய்தி பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மேனகா நவநீதனின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெளிவாக தெரிந்தது.

தொடர்ந்து, இதுகுறித்த செய்திகளை ஆராய்ந்தபோது நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சமூக வலைத்தளப்பக்கத்திலும் மேனகா நவநீதனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று பிப்ரவரி 8ஆம் தேதியன்று பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு கிழக்கு வேட்பாளர்கள் குறித்த செய்தியில் காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் செய்திகளில் வெளியாகியுள்ளது.

Also Read: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்ததாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமுரசு!

Conclusion

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tamil Nadu Election Commission
List of Contesting Candidates From Election commission Tamil Nadu
Twitter Post From, News 18 Tamil Nadu, Dated February 10, 2023
Twitter Post From, NTK ErodeEast, Dated February 08, 2023
YouTube Video From, News 18 Tamil Nadu


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular