Fact Check
இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டமா இது?
Claim: இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம்.
Fact: வைரலாகும் 2019 ஆண்டின் பழைய படமாகும். அப்படம் கொல்கத்தாவில் வலது சாரி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் “மோடிக்கு எதிராக டெல்லியில் கூடிய மக்கள்’ என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்படத்தை திமுக ஐடி விங்கின் மாநில துணை செயலாளர் பாலா உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர்.

