Fact Check
பாகிஸ்தானுடன் போருக்காக புறப்படும் ராணுவ வீரரான தாய் என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim
பாகிஸ்தானுடன் போருக்காக புறப்படும் ராணுவ வீரரான தாய்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.
பாகிஸ்தானுடன் போருக்காக புறப்படும் ராணுவ வீரரான தாய் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்டுவிட்டார் வீரத்தாய்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பாகிஸ்தானுடன் போருக்காக புறப்படும் ராணுவ வீரரான தாய் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் Source என்று AB Plus Photography என்னும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததால் குறிப்பிட்ட அந்த சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.

அதில், கடந்த மார்ச் 17, 2023 அன்று “Varsha Patil / Magdum BSF Army Joining Video Nandgaon/ Kolhapur / Maharashtra” என்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி, Kolhapur Lady Soldier Viral : Varsha Patil என்று இந்த வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டே செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
தனது 10 மாதக்குழந்தையைப் பிரிந்து ராணுவப்பணிக்கு செல்லும் வர்ஷா என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வீடியோவே தற்போதைய ஒன்று என்பதாக வெளியாகியுள்ளது.
Also Read: இந்தியாவுடன் போர் புரிய மறுத்த பாகிஸ்தான் ராணுவ வீரர் அழுததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
பாகிஸ்தானுடன் போருக்காக புறப்படும் ராணுவ வீரரான தாய் என்று பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Saam TV, Dated March 16, 2023
Instagram Post From, AB Plus Photography, Dated March 17, 2023