நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சட்டமன்றத் தேர்தலில் கோவையில் தவறவிட்ட வெற்றிக்கனியை இந்த தேர்தலின் மூலம் பறித்துள்ளது திமுக. கோவை மாநகராட்சியில் 100 இடங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவையில் திமுக வெற்றி பெற்றதற்கு அங்கு திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என்று திமுகவினர் புகழ்ந்து வருகின்றனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவை இனி முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “நான் தான் அடுத்த முதலமைச்சர். கோவை மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் எனது கோட்டை. விரைவில் திமுக எனது வசம் வரும். அமைச்சர் செந்தில்பாலாஜி” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உக்ரைன் தலைநகரில் பாராஷூட் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள் எனப்பரவும் பழைய வீடியோ!
Fact Check/Verification
நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று அமைச்சர் கூறியதாக பரவும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு நியூஸ் 7 வெளியிட்டது போன்று வைரலாகும் நிலையில், நியூஸ் 7 தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து நியூஸ் 7 சேனலின் இணை ஆசிரியர் சுகிதா சாரங்கராஜிடம் கேட்டபோது அவர் வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறப்பு செயலாளர் முருகேசனிடம் பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட செய்தி போலியானது; அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டது என்று விளக்கமளித்தார்.
Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்ளை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Conclusion
நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)