Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஒற்றைக்கல் விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஈஜிபுராப் பகுதியில் இருக்கும் ஸ்ரீகோதண்டராம சாமி கோவிலில் பிரம்மாண்ட விஷ்ணு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக வந்தவாசி வட்டம், கொரக்கோட்டை பகுதியில் உள்ள குன்றிலிருந்து 64 அடி உயரம், 26 அடி அகலம் உள்ள 350 டன் எடையுள்ளப் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.
இப்பாறையில் முகம் மற்றும் இரண்டு கால்கள் மட்டும் செதுக்கப்பட்டிருந்த நிலையில், இச்சிலையானது 2018 நவம்பர் 7ஆம் தேதி அன்று பெங்களூர் நோக்கி புறப்பட்டது. இதன்பின் 7 மாதங்களுக்குப் பிறகு 2019 ஜூன் 4 ஆம் தேதி கோதண்டராம சாமி ஆலயத்தை அடைந்தது.
இதுக்குறித்தச் செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ், பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் உள்ளிட்ட நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
தற்போது இச்சிலையை முழுமையாக செதுக்கப்பட்டு அதற்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.
வைரலாகி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, நமது நியூஸ்செக்கரின் நிருபர் பெங்களூர் ஈஜிபுரா கோதண்டராம சாமி கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவ்வாறு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இச்செய்தி முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது.
நமது நிருபர் விஷ்ணு சிலையின் தற்போதைய நிலையைப் படமாக எடுத்துள்ளார்.
அப்படம் உங்கள் பார்வைக்காக:
மேலும் இச்செய்திக் குறித்து நாம் ஆய்வு செய்ததில், இதே வதந்தி ஜூலை மாதத்திலும் பரவியுள்ளது என்பதையும், அதை மறுத்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டது என்பதையும் அறிய முடிந்தது.
ஒன்றைக்கல் பிரம்மாண்ட விஷ்ணு சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியானது முற்றிலும் பொய்யானது என்பது நமது விரிவான விசாரணைக்குப்பின் தெளிவாகியுள்ளது.
Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=632555194294139&set=pcb.632555687627423
Twitter Profile: https://twitter.com/Bhairavinachiya/status/1314786675847950336
Twitter Profile: https://twitter.com/VijayalashmiR/status/1315325123893764096
Indian Express: https://indianexpress.com/article/india/seven-months-300-km-and-a-few-knocks-later-giant-statue-reaches-karnataka-temple-5763454/
business Standard: https://www.business-standard.com/article/news-ani/64ft-tall-monolithic-statue-of-lord-vishnu-reaches-bengaluru-temple-119060500070_1.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)