ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்றாரா ஜெயக்குமார்?

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்றாரா ஜெயக்குமார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது –  ஜெயக்குமார்

Fact: இத்தகவல் தவறானதாகும். அதிமுக தரப்பு இதை தெளிவு செய்துள்ளது.

அண்மையில் மதுரை மாநகர பாஜக தலைவர் மகா சுசீந்திரன் அதிமுகவினருக்கு எச்சரிக்கை விடும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த அ றிக்கைக்கு பதிலடி தரும் வகையில், “அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர் அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@dravidam_100

Twitter Link | Archived Link

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/sekar.loganathan.73

Archived Link

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/singaravelu.singaravelu.585

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஸ்மிருதி இராணி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Fact Check/Verification

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறைவெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

Conclusion

அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்று ஜெயக்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK

Phone Conversation with Ivany, Puthia Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular