ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkவயநாடு மீட்புப்பணியில் பாஜக அரசு என்று பரவும் ஜப்பான் வீடியோ!

வயநாடு மீட்புப்பணியில் பாஜக அரசு என்று பரவும் ஜப்பான் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: வயநாடு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மத்திய பாஜக அரசு

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பானில் எடுக்கப்பட்டதாகும்.

வயநாடு மீட்புப்பணியில் தீவிரமாக செயல்படும் பாஜக அரசு என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”வயல்நாட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மத்திய பாஜக அரசு” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from x @katuva7

X Link/Archived Link

Screenshot from x @pcc_tv

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

வயநாடு மீட்புப்பணியில் தீவிரமாக செயல்படும் பாஜக அரசு என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2015ஆம் ஆண்டு “House washed away by flood water in Japan” என்று The guardian வெளியிட்டிருந்த வீடியோவும், “Typhoon Etau: thousands evacuated as severe flooding hits Japan” என்கிற அவர்களது கட்டுரையும் நமக்குக் கிடைத்தது. அக்கட்டுரையிலும் குறிப்பிட்ட வைரல் வீடியோவின் மற்றொரு கோணக்காட்சி இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, Amazing rescue as floods cause devastation in Japan என்று கடந்த செப்டம்பர் 10, 2015 அன்று 5 News வெளியிட்டிருந்த வீடியோவிலும் குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றிருந்தது. ஜப்பானின் கிழக்குப்பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம், 2015ல் தாக்கிய Etau சூறாவளியால் வீடுகள் அடித்துச்சென்றபோது அங்கு தவித்த மக்களை ஜப்பான் மீட்புக்குழுவினர் காப்பாற்றிய காட்சி இது என்பது நமக்கு உறுதியாகியது.

இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். குறிப்பிட்ட வீடியோ காட்சியே தற்போது வயநாட்டில் நடைபெறும் மீட்புப்பணிகள் என்பதாக தவறாகப் பரவுகிறது என்பதும் உறுதியானது.

Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

வயநாடு மீட்புப்பணியில் தீவிரமாக செயல்படும் பாஜக அரசு என்று பரவும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்பானில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, The Guardian, Dated September 10, 2015
YouTube Video From, 5 News, Dated September 10, 2015


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular