Claim
விமான பணிப்பெண்ணிடம் கூச்சலிட்ட வாலிபர்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact
விமான பணிப்பெண்ணிடம் வாலிபர் ஒருவர் கூச்சலிட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோ என அறிய முடிந்தது.
ஃபிளை ஹை இன்ஸ்டிட்யூட் எனும் நிறுவனத்தின் விமான பணிப்பெண் பயிற்சி வீடியோவே இவ்வீடியோ என அறிய முடிந்தது. அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் வாலிபரின் பெயர் சூரஜ் ஷெல்கே என அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியாக அறிய முடிந்தது. அப்பக்கத்தில் அவர் ஒரு நடிகர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபிளை ஹை இன்ஸ்டிட்யூட்டின் மற்றொரு பயிற்சி வீடியோவிலும் சூரஜ் ஷெல்கே நடித்திருப்பதை காண முடிந்தது.

Sources
Instagram post by Fly High Institute, dated November 11, 2025
Instagram post by Fly High Institute, dated November 13, 2025