ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி...

தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ராகுலின் நடைபயண யாத்திரையின் பெயரை கூட மறந்து, திரு.அண்ணாமலை அவர்களின்” என் மண் என் மக்கள்” யாத்திரை சிறப்பு என்கிறார் ஜோதிமணி.
Fact: இத்தகவல் தவறானதாகும். ஜோதிமணி இந்த பேட்டியின் முழு வீடியோவைப் பகிர்ந்து வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ராகுலின் நடைபயண யாத்திரையின் பெயரை கூட மறந்து, திரு.அண்ணாமலை அவர்களின்” என் மண் என் மக்கள்” யாத்திரை சிறப்பு என்கிறார். யாத்திரை எபெக்ட் பலே..” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

Screenshot from x apmbjp

Archived Link

Screenshot from x TN_BJP_IT_Wing

Archived Link

Screenshot from x DrRathigamano

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!

Fact Check/Verification

தமிழகத்தில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோ குறித்து ஆராய்ந்தபோது, ஜோதிமணி எம்பியே இதுகுறித்து முழு வீடியோவைத் தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹலோ பாஜக ஐ டி விங் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம வழக்கம்போல பாதி வீடியோவ மட்டும் கட் பண்ணி, பரப்பிக்கிட்டு இருக்கீங்க. இதோ முழு வீடியோ. Enjoy பாஜக நோட்டோவோட போட்டியிட்டு தோற்கும்” என்று தன்னுடைய பேட்டியின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பேட்டியில் “தமிழகத்தின் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமரும், பாஜக மாநிலத் தலைவரும் செயல்படுகிறார்கள். என் மண் என் மக்கள் மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். பாஜக நோட்டாவுடன் போட்டியிட்டு பலமாகத் தமிழகத்தில் தோற்கும்” என்று பேசியுள்ளார். பல்வேறு செய்தி நிறுவனங்களும் இந்த பேட்டியை வெளியிட்டுள்ளன.

அதில் அவர் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று கூறிய பகுதியை மட்டும் கட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: பல்லடத்தில் காலி இருக்கைகளுடன் பிரதமர் பேசியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

தமிழகத்தில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from NewsTamil 24X7, Dated Februry 29, 2024
X post from, Jothimani MP, Dated March 03, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular