Saturday, December 20, 2025

Fact Check

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் தகவல் உண்மையானதா?

banner_image

Claim

image

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் படம்.

Fact

image

வைரலாகும் தகவலில் காணப்படும் படத்திலிருப்பது தேரழுந்தூரில் உள்ள ஆமருவி பெருமாள் கோவிலின் வசந்தமண்டபத்தின் படமாகும். அப்படமும் பழைய படமாகும்.

கம்பராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்து, வளர்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்திருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் படம்.

Post Link

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் படம்.

Post Link

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் படம்.

Post Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம். அத்தேடலில் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் என்பவர் இத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தி புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

ஆமருவி தேவநாதன் கம்பர் பிறந்ததாக கூறப்படும் தேரழுந்தூர் பகுதியை சார்ந்தவராவார். அவரின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருந்ததாவது;

“தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் மாற்று மதத்தினர் அத்துமீறல், அவமரியாதை செய்துள்ளனர், கம்பர் வாழ்ந்த வீடு பாழ்பட்ட நிலையில் உள்ளது, கம்பர் மேடு கழிப்பிடமாக உள்ளது என்று வாட்ஸப் பதிவுகள் வலம் வருகின்றன.

ஆமருவிப் பெருமாள் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தின் 2007-08ம் ஆண்டுப் புகைப்படைத்தை வெளியிட்டு ‘கம்பர் வாழ்ந்த வீடு பாரீர்’ என்று வதந்தி பரப்புகிறார்கள். மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கில் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதுபோல், சொல்லமுடியாத பல செய்திகளைச் சொல்லியுள்ளார்கள். அவை அனைத்தும் பொய். வேண்டுமென்றே யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளார்கள். விஷமிகள் செய்துள்ள வம்பு இது.

2010ல் புனரமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் நேற்றுவரை (19-05-2025) பெருமாளுக்கு உற்சவத்தின் க்ரமப்படி, திருமஞ்சனம் நடந்துவந்துள்ளது. நேற்று திருத்தேர் உற்சவமும் நடந்துள்ளது. ஆக, அது கம்பர் வாழ்ந்த வீடு என்பது பொய், புரளி. கம்பர் கோட்டம் (திருமண மண்டபம்) பாழ்பட்ட நிலையில் உள்ளது என்றும் சொல்லியுள்ளார்கள். அதுவும் பொய். 2024 மார்கழியில் நாங்கள் கம்பர் விழாவை, அரசு அனுமதியுடன், அவ்விடத்தில் தான் நடத்தினோம். சென்ற மாதம் மத்திய அரசு நடத்திய 9 நாள் ‘கம்ப ராமாயண விழா’வும் அவ்விடத்திலேயே நடந்தது.

இந்தக் கட்டடம் தமிழக அரசின் கீழ் வருகிறது. இன்னும் சற்று பராமரிப்பு தேவை, காவல் தேவை என்று சொல்லலாமே தவிர, பாழாக உள்ளது என்பது பொய். கம்பர் வாழ்ந்த இடம் (கம்பர் மேடு) கழிப்பிடமாக உள்ளது என்பது அபாண்டமான பொய். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி இருந்தது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கம்பர் மேடு, தற்சமயம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது. 13-05-2025 அன்று நான் எடுத்த புகைப்படங்களை இணைத்துள்ளேன். அவ்விடத்தில் கம்பராமாயண ஓவியங்கள் மற்றும் பாடல்கள் கொண்ட திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துச் செயல்பட்டுவருகிறது.

பெரும் முயற்சிகள் எடுத்து, அரசிடம் முறையிட்டு மேற்சொன்ன பணிகள் நடக்க இருக்கும் நிலையில், கண்மூடித்தனமான பொய்களை அவிழ்த்துவிடுவதன் மூலம் இந்த நல்ல செயல்கள் பாதிக்கப்படலாம். ஒருவேளை அதுதான் புரளியாளர்களின் நோக்கமோ என்னவோ. ஆகவே, வாட்ஸப் செய்திகளை நம்பாதீர்கள். வீண் புரளியைக் கிளப்பாதீர்கள்.”

இப்பதிவில் குறிப்பிட்டிருப்பதுபோல் கடந்த மார்ச் மாதத்தில் தேரழுந்தூரில் கம்பராமாயண பாராயணம் நடந்ததாக PIB சென்னை செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஆமருவி தேவநாதன் அவரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இத்தகவல் பொய்யானது என்று கூறி வீடியோவுடன் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.  அவ்வீடியோவில் வைரலாகும் பதிவில் காணப்படும் அதே மண்டபத்தின் முன் நின்று ஒருவர் பேசுவதை காண முடிந்தது. வீடியோவில் மண்டபம் நல்ல நிலையில் இருப்பதை காண முடிந்தது.

வைரலாகும் படத்திலிருப்பது ஆமருவி பெருமாள் கோவிலில் இருப்பது கம்பர் வீடல்ல; அது தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலின் வசந்த மண்டபம் என்று வீடியோவிலிருப்பவர் கூறியிருந்தார். அதுபோல வைரலாகும் படம் பழைய படம் என்றும், கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பே அம்மண்டபம் புனரமைக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தேடுகையில்  தமிழ்நாடு தகவல் சரிப்பார்கமும் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.  

“கம்பர் பிறந்த இடம் பராமரிப்பின்றி உள்ளதாகப் பரவும் புகைப்படத்தில் இருப்பது தேரழுந்தூரில் உள்ள அருள்மிகு ஆமருவிப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபத்தின் சுமார் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட புகைப்படமாகும். தற்போது வசந்த மண்டபம் பராமரிக்கப்பட்டு உற்சவங்கள் நடைபெற்று வருவதாக கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார். 1984ல் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் ஊராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கம்ப ராமாயண விழா நடைபெற்றுள்ளது. கம்பர் மேடு இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூடவே வசந்த மண்டபம், கம்பர் கோட்டம், கம்பர் மேடு உள்ளிட்ட பகுதிகளின் புகைப்படமும் அப்பதிவில் இணைக்கப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

வைரலாகும் படத்திலிருப்பது கம்பர் வீடு அல்ல; அது தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலின் வசந்த மண்டபமாகும்.

வைரலாகும் படம் பழைய படமாகும்;  தற்போது இம்மண்டபம் நல்ல நிலையிலேயே உள்ளது.

அதேபோல் கம்பர் பிறந்ததாக கருதப்படும் கம்பர்மேடு பகுதியும் நல்ல பராமரிப்பிலேயே உள்ளது.

Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?

Conclusion

கம்பர் வாழ்ந்த வீடு பாழடைந்துள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
X post by Writer Amaruvi Devanathan, Dated May 20, 2025
Facebook post by Writer Amaruvi Devanathan, Dated May 20, 2025
X post by TN Fact Check Unit, Dated June 6, 2025
Press Release by PIB Chennai, Dated March 18, 2025

RESULT
imageFalse
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage