Fact Check
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி காலில் தவறுதலாக விழுந்த விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஆறுதல் கூறும் நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள அறைக்கு பதிலாக இளம் ஜோடி இருந்த அறைக்குள் தவெக தலைவர் விஜய் தவறுதலாக நுழைந்து அவர்கள் காலில் விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை விஜய் சந்தித்ததாக பரவும் பழைய படங்கள்!
Fact Check/Verification
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, அவர்களது X பக்கத்தில், “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இதை உறுதிப்படுத்திக் கொள்ள புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தினார்.
எனவே, இந்த செய்தி தவறாக பரப்பப்படுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
கரூர் நபர்களுக்கு பதிலாக இளம் ஜோடி ஒன்றின் காலில் தவறுதலாக விழுந்த தவெக தலைவர் விஜய் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, Puthiyathalaimurai, Dated October 28, 2025
Phone conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated October 29, 2025