Friday, December 5, 2025

Fact Check

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளாரா?

banner_image

Claim

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்.
Screengrab from X@nikaran_tn

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.

Also Read: தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?

Fact

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “The perfect ‘Theri’fic combination! Thank you, @trishakrishnan and Vijay sir for choosing us. We’re thrilled to be a part of your journey!” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 26, 2023 அன்று வைரலாகும் படத்தின் உண்மையான படத்தை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளிநாட்டுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்படத்தில் விஜய் மற்றும் விமானியுடன் நடிகை திரிஷாவும் இருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் 2023 பிப்ரவரியில் சமயம் தமிழ், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் இப்படம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் கரூர் சம்பவத்திற்கு பிறகு  எடுக்கப்பட்டதல்ல; அப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய படம் என்பது தெளிவாகின்றது.

Sources
Instagram post by SpiceJet Airlines, dated February 26, 2023
Report by Samayam Tamil, dated February 27, 2023
Report by Hindustan Times Tamil, dated February 27, 2023

RESULT
imageFalse
image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage