Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் – காவ்யா மாறன்
Fact:வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
காவ்யா மாறன் பெரியார் உயிருடன் இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் – காவ்யா மாறன்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டதா புதிய தலைமுறை?
காவ்யா மாறன் பெரியார் உயிருடன் இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் ஆராய்ந்த போது, “பிரபாகரனே சொன்னாலும் பெரியாரை நான் ஏற்க மாட்டேன்” என்று நாதக தலைவர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.
ஆனால், அந்த நியூஸ்கார்டில் இடம்பெற்றுள்ள தகவலுமே போலியானது என்றும், சீமான் கூறியதை திரித்து சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்து அதில் காவ்யா மாறன் குறித்த தவறான செய்தியை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.
இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் காவ்யா மாறன் குறித்த நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார்.
Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
காவ்யா மாறன் பெரியார் உயிருடன் இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post From, Sun News Tamil, Dated February 10, 2025
Phone Conversation With, Manoj, Sun News Tamil, Dated February 11, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 17, 2025
Ramkumar Kaliamurthy
March 4, 2025
Ramkumar Kaliamurthy
February 24, 2025