Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு
Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். இது வட கேரளாவின் தெய்ய ஆட்டத்தின் ஒரு பாரம்பரிய பகுதியாகும்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“கேரள அரசு கோவில்களில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்துள்ளது தற்போது ஹனுமான் ஜியின் உருவ சிலைக்கு சாராயம் பரிமாறப்படுகிறது இறைச்சி பரிமாறப்படுகிறது அல்லா ஹோ அக்பர் என்று கோஷமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கேடு கெட்டவர்கள் அழிக்கிறார்கள் நம்மை.” என்று இந்த வீடியோ தகவல் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வீடியோவை ஆராய்ந்தபோது, வடக்கு கேரளாவில் பாரம்பரியமாக நடைபெறும் தெய்யம் நடனம் அது என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.
எனவே, அதுகுறித்த கீ-வேர்டுகள் மூலமாக நாம் தேடியபோது ஜனவரி 16, 2023 அன்று Times Now வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், வைரல் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட முகப்புப் படத்தை நம்மால் காண முடிந்தது. @AbbakkaHypatia என்கிற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ முதன்முதலில் ”Kerala Theyyam with Islamic prayer said first. Our unity is centuries old” என்கிற அடைமொழியுடன் ஜனவரி 11 அன்று பதிவிடப்பட்டதாக Times Now கட்டுரை மூலமாக நாம் அறிந்து கொண்டோம்.
தொடர்ந்த நம்முடைய தேடலில், டிசம்பர் 24, 2022 அன்று “மாப்பிள்ள (Muslims) தெய்யம்” என்கிற தலைப்பில் கைரளி நியூஸ் வெளியிட்டிருந்த இந்த வைரல் வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், கேரளாவின் காசர்கோட்டில் இஸ்லாமிய ஆராதனையுடன் துவங்கும் தெய்யம் நடனம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாப்பிரியன் – மணிச்சி தெய்யம் என்னும் இந்த நடனம், காசர்கோட்டின் மடிகை கோவிலில் நடைபெறுகிறது. சமய ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நடனம் என்னும் இந்த தெய்யம் ஆட்டம் குறித்த மேலும் செய்திகளை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
ஜனவரி 16, 2023 அன்று Indian Express வெளியிட்டுள்ள செய்தியில், “வடக்கு கேரளா மற்றும் கர்நாடகாவில் பெரும்பாலும் ஆடப்படும் இந்நடனத்தில் சில இடங்களில் இஸ்லாமிய பாத்திரங்களும் இடம் பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிச்சி தெய்யம் மற்றும் பாப்பிரியன் தெய்யம் ஆகியவை இஸ்லாமிய தெய்ய நடனங்கள் என்றும், இந்து தெய்ய நடனக்கலைஞர்கள் இஸ்லாமிய தொழுகை வாசங்களுடன் இதில் நடனம் புரிவார்கள் என்றும் அறிந்து கொண்டோம். வடக்கு கேரளாவில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் மாப்பிள்ளமார் என்று அறியப்படுகிறார்கள்.
எனவேதான், இந்த தெய்ய ஆட்டம் மாப்பிள்ள தெய்யம் என்று அழைக்கப்படுகிறது. கிட்டதட்ட 15 வகை மாப்பிள்ள தெய்யம் ஆட்டங்கள் உள்ளன. இந்து சமயத்தினராலேயே இத்தெய்ய ஆட்டம் நடத்தப்படுகிறது. சமய ஒற்றுமையை மேற்கோள் காட்டும் வகையில் காலம்காலமாக இஸ்லாமிய கதாப்பாத்திரங்களுடன் இந்த தெய்யம் ஆட்டம் நடைபெற்று வருகிறது என்று The Hindu வெளியிட்டுள்ள மே 23, 2019 கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை கோவில்களில் பணியமர்த்திய கேரள அரசு என்பதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Kairali News Youtube video, December 24, 2022
Indian express news report, January 16, 2023
(இக்கட்டுரை நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடப்பட்டது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 22, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 17, 2024
Kushel Madhusoodan
December 13, 2024