ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024

HomeFact Checkபெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை அடித்து நொறுக்கிய பெண்கள்; வைரலாகும்...

பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை அடித்து நொறுக்கிய பெண்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல்
Screengrab from Twitter @manickamainthan
கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் - 01
Screengrab from Facebook / தாயகம் காப்போம்
கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் - 02
Screengrab from Facebook / ar.thavathi.5

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!

Fact Check/Verification

கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அனைவரும் அடித்து நொறுக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் மனோரமா வைரலாகும் இவ்வீடியோ குறித்து “11 women arrested over assaulting man who cut ties with Irinjalakuda cult” என்று தலைப்பிட்டு  செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

மனோரமா வெளியிட்டிருந்த இச்செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது யாதேனில்,  கேரளாவின் திருச்சூரில் இருக்கும் முறியாடு பகுதியில் வைரலான இச்சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் பெண்களின் தாக்குதலுக்கு உண்டானவர்கள் ஷாஜி என்பவரும் அவரின் குடும்பத்தினரும் ஆவர். இக்குடும்பத்தினர் முறியாடு எம்பரர் இம்மானுவல் திருச்சபையில் முன்னர் ஒரு அங்கமாக இருந்துள்ளனர். பிறகு திருச்சபையை விட்டு விலகி, திருச்சபையுடன் உள்ள தொடர்பை துண்டித்துள்ளனர். இதனையடுத்து எம்பரர் இம்மானுவல் திருச்சபைக்கு அருகே ஷாஜி குடும்பத்தினர் காரில் சென்றுக் கொண்டிருக்கும்போது, திருச்சபையை சார்ந்தவர்களின் புகைப்படைங்களை மார்ஃப் செய்து வெளியிட்டதாக கூறி பெண்கள் இவரின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.

கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் - 03
Screengrab from Onmanorama

தொடர்ந்து தேடியதில் மாத்ருபூமி நியூஸ் இதே செய்தியை ஜனவரி 6, 2023 அன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அதேபோல் வேறு சில ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. அதை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

வைரலாகும் சம்பவம் நடந்த பகுதி ஆலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டிருப்பதால் ஆலூர் காவல் நிலையத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரித்தோம். இதற்கு அவர்கள், இச்சம்பவத்தில் தொடர்புள்ள ஷாஜி குடும்பத்தினருக்கும், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எந்த ஒரு அரசியல் கட்சி தொடர்பும் இல்லை என்று பதிலளித்தனர்.

மார்ஃப் புகைப்படங்கள் குறித்து கேட்கையில், அப்புகைப்படங்கள் வெளிநாட்டு IP முகவரிகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷாஜி குடும்பத்திற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என விசாரித்து  வருகின்றோம் என்று கூறினர்.

இதனையடுத்து எம்ப்ரர் இமானுவேல் திருச்சபையின் செய்தி தொடர்பாளர் டாக்டர் எடிசனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில், அவரும் ஷாஜியும் அவரது குடும்பத்தினரும் எந்த ஒரு அரசியில் கட்சியை சேர்ந்தவர்களில்லை என கூறினார்.

ஷாஜி குடும்பத்தினர் திருச்சபையை விட்டு வெளியேறியவுடன் திருச்சபையை சேர்ந்தவர்களை அவமானப்படுத்த பல வழிகளில் முயன்றனர். ஷாஜி திருச்சபையை சார்ந்த பெண்களின் புகைப்படங்களை மார்ஃப் செய்து வெளியிட்டார். இது பெண்களுக்கு கோபத்தை உண்டாக்கியது என்று அவர் கூறினார்.

இதனடிப்படையில் காண்கையில், வைரலாகும் வீடியோவில் அடி வாங்கும் ஷாஜி என்பவர் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்தாரா, இல்லையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை, அது போலிஸ் விசாரணையில் உள்ளது.  ஆனால் அவர் கண்டிப்பாக பாஜக அல்லது வேறு எந்த கட்சியையும் சேர்ந்தவரில்லை என்பது தெளிவாகியுள்ளது.

Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!

Conclusion

கேரளாவில் பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை பெண்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.    

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் மலையாளத்தில் வெளிவந்த செய்தியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது)

Result: False

Sources

Telephone conversation with Aloor police
Telephone conversation with Dr Edison of Emperor Immanuel Church

Media Reports from Onmanorama, Mathrubhumi News, Kairali TV, Asainet news, and Reporter TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular