Fact Check
அம்சா வீட்டு கதவை தட்டுனா என்ன தப்பு என்றாரா ஈபிஎஸ்?
Claim
அம்சா வீட்டு கதவை தட்டினா என்ன தப்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
Fact
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம்” என்ற பெயரில் ரோடு ஷோ நடத்தி வருகின்றார்.
திட்டக்குடியில் நடந்த கூட்டத்தில் “தம்பி உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பேசி இருக்கின்றார். அவர் பேசும்போது எடப்பாடி பழனிசாமி அம்சா வீட்டு கதவை தட்டுறதா சொல்றார். அதுல என்னப்பா தப்பு” என்று ஈபிஸ் பேசியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் நாளை நமதே எனும் எக்ஸ் பக்கத்தில் “ஏப்பா உதயநிதி நீ செஞ்சா சரி நான் செஞ்சா தப்பா” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவின் உண்மையான வீடியோ வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் எடப்பாடி பழனிசாமி அம்சா என்று கூறி பின்னர் அதை திருத்தி “அமித்ஷா வீட்டு கதவை..” என்று கூறுவதை கேட்க முடிந்தது.
Also Read: நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?
இதன்படி பார்க்கையில் ஈபிஎஸ் அமித்ஷா என்று கூறியதை வெட்டி நீக்கிவிட்டு “அம்சா வீட்டு கதவை..” என்று அவர் பேசியதாக திரித்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.
Sources
X post by Naalai Namadhe, dated July 14, 2025