Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம்
வைரலாகும் புகைப்படம் பான் விற்பனைக்கடை ஒன்றின் புகைப்படமாகும்.
மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் புகைப்படத்துடன் மதுக்கடை உ.பி.யில்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?
மதுக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி குறித்து Liquor shop, Modi, yogi images உள்ளிட்ட ஆங்கில கீ-வேர்டுகளைப் பயன்படுத்து ஆராய்ந்தபோது கடந்த
2022ஆம் ஆண்டே இதுகுறித்த செய்தி பரவியதை நாம் அறிந்து கொண்டோம்.
குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களை ஆராய்ந்தபோது पान मंदिर என்கிற வாசகம் பிரதமர் மோடி மற்றும் யோகி புகைப்படத்துடன் இடம்பெற்றிருப்பதை அறிந்தோம். அதனை மொழிபெயர்த்தபோது “Pan Mandir” என்பது உறுதியாகியது.
நம் தேடலில், கடந்த நவம்பர் 02, 2022 அன்று News 18 வெளியிட்டிருந்த “Moradabad: Paan lovers gather here, sale is done in the name of PM and CM” என்கிற தலைப்பிலான கட்டுரையில் வைரலாகும் புகைப்படத்துடன் கூடிய வீடியோ செய்தி இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட வீடியோவிலேயே எங்கும் அக்கடையில் மது பாட்டில்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டே, “The taste of this city which has spread its shine all over the world is also special, do not miss the taste of these dishes when you come here” என்கிற பெயரில் ABP வெளியிட்டிருந்த கட்டுரையில் இந்த பான் கடை குறித்தும் இடம்பெற்றிருந்தது.. விஜய் குமார் குப்தா என்கிற மொரதாபாத் பான் கடை உரிமையாளர் யோகி மற்றும் மோடியின் மீதான மதிப்பின் காரணமாக அவர்களுடைய புகைப்படங்களை கடையின் பெயருடன் வைத்திருப்பதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பான் கடையின் வெளிப்புற புகைப்படமே மதுபானக்கடையில் யோகி மற்றும் மோடியின் புகைப்படங்கள் என்பதாக வைரலாகிறது.
Also Read: கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்றாரா அண்ணாமலை?
மதுபானக்கடை போர்டில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் புகைப்படம் என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report By ABP, Dated July 11, 2019
Report By News 18, Dated November 02, 2022
Vijayalakshmi Balasubramaniyan
November 8, 2024
Ramkumar Kaliamurthy
June 6, 2024
Ramkumar Kaliamurthy
May 29, 2024