“கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற அண்ணாமலை கைது. தலைமை அலுவலகத்தில் சரக்கு விற்பதில்லை என்று அதிகாரிகள் விளக்கம்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முற்றுகையிடச் சென்றதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் இத்தகவல் பாலிமர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் பாலிமர் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக, “வீட்டில் இருந்து டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட சென்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனையடுத்து பாலிமர் நியூஸின் டிஜிட்டல் பொறுப்பாளர் சுரேந்தரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
இதனையடுத்து தேடுகையில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதாக கூறி பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வந்திருப்பதையும் காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: ஆதவ் அர்ஜூனா தவெகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாரா?
Conclusion
கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முற்றுகையிடச் சென்றதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post by Polimer News, Dated March 17, 2025
Phone Conversation With Suredndar, Polimer News