முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற பெயர் கொண்ட புத்தகம் இம்மாத இறுதியில் வெளியாகிறது என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சென்னையில் வருடம்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி கொரோனா பரவலால் இந்தமுறை தாமதமாக துவங்கியுள்ளது. சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 45வது புத்தகக்கண்காட்சியை துவங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ’உங்களில் ஒருவன்’ என்கிற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் என்றும், அப்புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், “முதல்வர் எழுதிய உளராமல் பேசுவது எப்படி…நான் எழுதிய உளராமல் பேசுவது எப்படி நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்கிற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Facebohttps://www.facebook.com/ThangaduraiDTR/posts/391595649526555ok Link


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!
Fact Check/Verification
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற புத்தகம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ்கார்டு கேலிசெய்யும் வகையில் இருந்ததாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியில் பேசிய உரையை கேலி செய்தே குறிப்பிட்ட நியூஸ் கார்டு வைரலாகிறது என்பதும் நமக்கு உறுதியானது. எனினும், பலரும் அதனை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
எனவே, குறிப்பிட்ட நியூஸ் கார்டின் போலித்தன்மையை உறுதி செய்து கொள்ள தந்தி டிவி தரப்பில் அதன் டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த வினோத்திடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு “போலியானது” என்று உறுதி செய்தார். தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோகவர்ஷினியும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு “சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும், தந்தி டிவியில் வெளியான “முதல்வர் எழுதிய உங்களில் ஒருவன். நான் எழுதிய `உங்களில் ஒருவர்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்கிற நியூஸ் கார்டை எடுத்து அதில் முதலமைச்சர் ஸ்டாலினின் மற்றொரு புகைப்படத்தை இணைத்து சொற்களை மாற்றி குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டினை எடிட் செய்துள்ளனர் என்பதும் உறுதியானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புத்தகக்கண்காட்சியில் ஆற்றிய உரையையும் இங்கே உங்களது பார்வைக்கு இணைத்துள்ளோம். அதிலிருந்தே, குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு தவறானது என்று அறிந்துகொள்ள முடியும்.
Conclusion
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய உளராமல் பேசுவது எப்படி என்கிற புத்தகம் என்பதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)