சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் புகைப்படம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் புகைப்படம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரவி வரும் கொரானா பரவலைக் கட்டுப்படுத்த பல முன்னேடுப்புகளை எடுத்து வருகின்றார். தமிழகமெங்கும் பல இடங்களில் புதிதாக கொரானா மையங்களை ஏற்படுத்தி வருகின்றார்.

இதனிடையே முதல்வர் அவர்கள் பிணக்கிடங்கு ஒன்றைத் திறந்து வைத்ததாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் பதிவு -1

Archive Link: https://archive.ph/bXMfx

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் பதிவு -3

Archive Link: https://archive.ph/pwnoy

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் பதிவு -2

Archive Link: https://archive.ph/qgjkT

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானதை தொடர்ந்து, வைரலாகும் பதிவில் இருக்கும் இரு படங்களையும் தனித்தனியாக கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதில் முதல்வர் குறித்து பரவும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு தெளிவாகியது.

இருவேறு சம்பவங்களில் இடம்பெற்ற இரு படங்களை ஒன்றாக இணைத்து இவ்வாறு ஒரு பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

முதல் படம்:  திரைப்படத்தில் இடம்பெற்றதாகும்.

மேலே ‘சிவா பிணக்கிடங்கு’ என்று பெயர் பலகை உள்ள படம், தமிழ் படம் எனும் திரைப்படத்தில் வரும் ஒரு பாடற்காட்சியில் இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை

இரண்டாவது படம்:  முதல்வர் சேலத்தில் கொரானா மையத்தை திறந்து வைத்தபோது எடுத்தது.

தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் இரும்பு உருக்காலையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரானா சிறப்பு சிகிச்சை மையத்தை கடந்த வியாழனன்று (20/05/2021) திறந்து வைத்தார். இச்சமயத்தில்  எடுக்கப்பட்ட படமே வைரலாகும் பதிவில் இரண்டாவதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Conclusion

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிணக்கிடங்கை திறந்து வைத்ததாக கூறி வைரலாகும் படத்தில் இருக்கும் இரு காட்சிகளும் இருவேறு சந்தர்பங்களில் எடுக்கப்பட்டதாகும். அவற்றை ஒன்றாக இணைத்து முதல்வர் பிணக்கிடங்கை திறந்து வைத்தார் எனும் பொய்யானத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

இதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

M.K.Stalin’s Official Twitter Handle: https://twitter.com/mkstalin/status/1395251306911080448

Puthiya Thalaimurai: http://www.puthiyathalaimurai.com/newsview/103249/Salem-Covid-care-Centre-is-equipped-with-500-oxygen-bed-is-opened-and-inspected-by-Chief-minister-MK-Stalin

Daily Thanthi: https://www.dailythanthi.com/amp/News/Districts/2021/05/21033518/With-500-oxygen-beds-at-the-Salem-Iron-Ore-CampusCorona.vpf

Dinamani: https://www.dinamani.com/latest-news/2021/may/20/cm-inspects-opening-of-corona-treatment-center-at-salem-iron-plant-campus-3626544.html

Maalaimalar: https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/05/20102045/2653718/Tamil-News-CM-MK-Stalin-opens-new-Corona-treatment.vpf

My V Log: https://www.youtube.com/watch?v=lQb9XZ9uYYo


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular