வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக் கடவுள்களை புறக்கணித்து விட்டு, கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பரவும் தகவல்

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கொள்கை ரீதியாக பல விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும் ‘கடவுள் மறுப்பு’ என்ற ஒற்றை கொள்கையில் மட்டும் அடிப்படையில் ஒன்று பட்டிருந்தது. ஆனால் இந்த ஒற்றுமை ஜெயலலிதா அவர்கள் அதிமுக தலைவரான பின் அதிமுகவிலிருந்து காணாமல் போனது.

ஆனால் திமுகவை பொறுத்த வரை  இன்றளவும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கடவுள் மறுப்பாளராகவே திகழ்ந்து வருகின்றனர்.  அதுவும் கட்சியின் தலைவரும் தமிழக முதலவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போதும் தன்னை ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதாகவே காட்டிக் கொண்டு வருகின்றார்.

மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த கொள்கையை சுட்டிக்காட்டி, இவர் இந்துக்களுக்கு எதிரானவர், கிறித்தவ மிஷனரிகளின் கைக்கூலி, இஸ்லாமியர்களின் கைக்கூலி, சிறுபான்மையினர்களுடன் சேர்ந்து இந்துக்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று பல அவதூறுகளை இவர்மீது தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.

தற்போது கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்  கிறித்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பரவும் பதிவு - 1

Archive Link:https://archive.ph/Yn2LU

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பரவும் பதிவு - 2

Archive Link: https://archive.ph/vj0f7

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பரவும் பதிவு - 3

Archive Link: https://archive.ph/mFY6d

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கிறித்தவ ஆலயத்திற்கு சென்றதாக பரவும் புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு  செய்தோம்.

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து வைரலாகும் புகைப்படம் எங்கு, எந்த சந்தர்பத்தில் எடுக்கப்பட்டது என்பதை அறிய இப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் செய்தோம். இவ்வாறு செய்ததன் பின் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மை நமக்கு புலனாகியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின்  மனைவி ஜெசிந்தா அவர்கள் சமீபத்தில் காலமானார். அன்னாரது உடல் சென்னை அண்ணா நகரில் உள்ள புனித லூக்கா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது.  

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தவறாக திரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

இதுக்குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

திமுகவின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்து பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஸ்டாலின் அவர்கள் கிறித்தவ ஆலயம் சென்றுள்ளார். இதை விஷமிகள் அவர் வேறு காரணங்களுக்கு சென்றதாக தவறான ஒரு கருத்தை  பூடகமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Conclusion

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றார் எனும் தகவல் உண்மையே. ஆனால் அவர் கடவுள் வழிபாட்டுக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அங்கு செல்லவில்லை.  பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி காலமானதால், அவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவே அங்கு சென்றார்.

இந்த விஷயத்தை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Kalaignar TV: https://www.youtube.com/watch?v=C-Vcs3kjfxE

DMK Official Twitter Handle: https://twitter.com/arivalayam/status/1389867650059096066

ETv Bharat: https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/stalin-pays-homage-to-peter-alphonse-wife/tamil-nadu20210505150154605

Insta News: https://www.instanews.city/breakingnews/peter-alphonses-wife-dies-mk-stalin-attends-funeral-888319

Etamil News: https://www.etamilnews.com/beeter-alponess/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular