Fact Check
தமிழகத்தில் முதியவர் ஒருவரைக் கடித்த கழுதை என்று பரவும் வீடியோ உண்மையா?
Claim: தமிழ்நாட்டில் முதியவர் ஒருவரைக் கடித்த கழுதை
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு மகாராஷ்டிராவில் நடைபெற்றதாகும்.
தமிழகத்தில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”கவனமாக இருங்கள், இப்போது விடியல் ஆட்சியில் கழுதைகளும் கடிக்க ஆரம்பித்துவிட்டன. நடந்து செல்லும் போது கழுதைகள் அருகில் வந்தால் எச்சரிக்கை ஜாக்கிரதை” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
Fact Check/Verification
தமிழகத்தில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 17, 2023 அன்று ZeeNews வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், மகாராஷ்டிரா கோலாப்பூரில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக தெளிவாக செய்தி இடம்பெற்றுள்ளது.

இச்செய்தி, Free Press Journal, News Flare உள்ளிட்ட செய்தி ஊடகத்தளங்களிலும் வெளியாகியுள்ளது. அதிலும், கோலாப்பூரில் கழுதை ஒன்று முதியவரைத் தாக்கியது குறித்த செய்தி விளக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மகராஷ்டிரா வீடியோவே தமிழ்நாட்டில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாகப் பரவுகிறது.
Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
தமிழகத்தில் முதியவர் ஒருவரை கழுதை கடித்ததாக பரவும் வீடியோ மகாராஷ்டிராவில் நடைபெற்றது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report By ZeeNews, Dated July 17, 2023
Report By Free Press Journal, Dated July 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)