Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம்
Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் வீடியோ தாய்லாந்தைச் சேர்ந்ததாகும்.
EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பாபா ஆதவ்வுடன் சரத் பவார்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெஞ்சல் புயலில் மக்கள் தவிக்கும்போது ஈபிஎஸ் திருமண விருந்தில் கலந்துக்கொண்டாரா?
EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது கடந்த அக்டோபர் 18, 2020ஆம் ஆண்டு Alfons Lopez Tena என்கிற கேட்டலோனிய அரசியல்வாதியின் சமூக வலைத்தளப்பக்கத்தில் “Pro-democracy demonstration in Bangkok, Thailand” என்று இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் 15, 2020 அன்று ”Thai protests: Tens of thousands gather again in mass defiance of government” என்று பிபிசி வெளியிட்டுள்ள செய்தியிலும் வைரலாகும் வீடியோவுடன் ஒத்துப்போகும் வகையிலான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், பல்வேறு ஊடகங்களும் இந்த போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 17, 2020 அன்று WION வெளியிட்டுள்ள செய்தி வீடியோவிலும் இந்த வைரல் வீடியோவை ஒத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு உள்நாட்டுக் கலவரம் மூலமாக தாய்லாந்து பிரதமரான Prayuth Chan-ocha வின் கட்சி முறைகேடுகளின் மூலமாக ஆட்சியில் நீட்டிப்பதாகக் கூறி மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்ட வீடியோவே தற்போது மகாராஷ்டிராவில் EVMக்கு எதிராக போராட்டம் என்று வைரலாகிறது.
Also Read: சென்னை வெள்ளநீரில் அறுந்து விழுந்து எரியும் மின்சார கம்பி என்று பரவும் வீடியோ உண்மையா?
EVMக்கு எதிராக மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report From, BBC, Dated October 15, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 21, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 3, 2024