Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது
வைரலாகும் வீடியோ செய்தி வதந்தியைப் பரப்பும் வகையில் பரப்பப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ, “Hello @tnpoliceoffl This is happening in Arena of Meenakshi Amman Temple, Madurai. It can lead to riots. @Maduraidistpol1
, Plz take necessary action” என்று Voice of Hindu என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்தது.


தமிழில் ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் மர்ம கும்பலுக்கு யார் அனுமதி கொடுத்தது @mkstalin @PKSekarbabu அவர்களே இந்துக்கள் பாவத்தை சேர்த்து கொண்டே போகாதீர்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வீடியோவிலேயே அது ஆடா, மாடா என்று தெரியவில்லை என்றும் வடமொழியில் பேசியுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து மதுரை மீனாட்சி கோயில் சுற்றுவட்டாரப்பகுதியில் விசாரித்தோம். அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மேல கோபுரம் அருகில் மேல மடத்து சந்து என்கிற இடத்தில் வசித்து வருகிறார் சிவராமன் என்கிற சாமியாடி. குறிசொல்பவரான இவர் பக்தர்கள் தரும் காணிக்கையை சேர்த்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் கிடா அறுத்து அன்னதானம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்த வருடமும் அவ்வாறு ஆடுகளை அறுத்தபோது அதனை வீடியோ எடுத்து சிலர் அவதூறாக அவர் மாடுகளை வெட்டுவதாக பரப்பியுள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து சிவராமனை தொடர்பு கொண்டு பேசியபோது, ”பக்தர்களிடம் காணிக்கை பெற்று பல வருடங்களாகவே இந்த நடைமுறையை செய்து வருகிறோம். ஜாதி, மத வேறுபாடு இன்றி ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்து வருகிறேன்.
ஆனால், தவறான முறையில் இதை சித்தரித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.” என்று விளக்கமளித்தார். வழிபாட்டிற்காக எளியோர்க்கு அன்னதானம் அளிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வை தவறான நோக்கில் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் மாடு வெட்டப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With, Sivaraman, Dated February 19, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 23, 2025