திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12, 2024
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12, 2024

HomeFact Checkமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்ற தகவல் உண்மையா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்ற தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கச்சிலை

Fact: வைரலாகும் புகைப்படத்தில் உள்ள சிலை நகைக்கடை ஒன்றின் வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி விக்கிரகம் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அம்மாவின் விக்கிரகம்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from x @ithanagaraj

X Link/Archived Link

Screenshot from x @manickamainthan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

Fact Check/Verification

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி விக்கிரகம் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது மதுரை செம்மனூர் நடைக்கடையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் கடந்த மார்ச் 12, 2020 அன்று ”Customers Video Blessing of Goddess Meenakshi Amman is Here. Idol carved using 210 Kg Gold & Silver Blessed in Madurai Meenakshi Amman Kovil” என்று அந்நகைக்கடை வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் வீடியோ இடம்பெற்றிருந்தது.

அதே போன்று, இந்த சிலை குறித்த புகைப்படங்களும் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட நகைக்கடையின் வெளியில் அமைந்துள்ள சிலையே மீனாட்சி அம்மன் கோவிலிலேயே நிறுவப்பட்டுள்ளதாகப் பரவி வருகிறது.

Also Read: வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

Conclusion

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Facebook Post From, Chemmanur international jewellers Madurai, Dated March 12, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular