Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மக்கள் திலகம் எம்ஜிஆர் முகத்தோற்றத்தையுடைய வெளிநாட்டவர்.
வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். வெளிநாட்டவர் ஒருவரின் முகத்தை AI மூலம் மாற்றி இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் முகத்தோற்றத்தில் வெளிநாட்டவர் ஒருவர் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சாட்டை துரைமுருகன் பெண் ஒருவருடன் நடனம் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் முகத்தோற்றத்தையுடைய வெளிநாட்டவர் என்று பரப்பப்படும் வீடியோவில் “லண்டன் தமிழ் ப்ரோ” என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை ஆதாரமாக வைத்து தேடியதில் லண்டன் தமிழ் ப்ரோ எனும் யூடியூப் பக்கத்தில் “தமிழில் வெளுத்து வாங்கும் வெள்ளைக்கார துரை” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோவை ஷார்ட்ஸ் வடிவில் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
ஆனால் இவ்வீடியோவில் காணப்பட்ட வெளிநாட்டவரின் முகத்தோற்றம் வைரலாகும் வீடியோவிலிருப்பதுபோல் எம்ஜிஆரின் முகத்தோற்றத்தில் காணப்படவில்லை.
இதனைடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.
தொடர்ந்து இவ்வீடியோ குறித்து hivemoderation, sightengine ஆகிய Ai கண்டறியும் இணையத்தளங்கள் வாயிலாக ஆய்வு செய்தோம். இவ்விரண்டு தளங்களும் வைரலாகும் வீடியோவில் டீப்ஃபேக் முறையை பயன்படுத்தி முகம் மாற்றப்பட்டதை உறுதி செய்தன.
மக்கள் திலகம் எம்ஜிஆர் முகத்தோற்றத்தையுடைய வெளிநாட்டவர் என்று பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். வெளிநாட்டவர் ஒருவரின் முகத்தை AI மூலம் மாற்றி இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video from London Tamil Bro, Dated September 30, 2022
hivemoderation
sightengine
Vijayalakshmi Balasubramaniyan
June 9, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 19, 2025
Vasudha Beri
May 14, 2025