Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
வைரலாகும் வீடியோவுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பில்லை. ராணுவ அதிகாரி ஒருவரை 12 பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் தாக்கியதாக தந்த புகார் குறித்து நடந்த பத்திரிக்கை சந்திப்பு வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
“பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது என கலைந்து சென்ற ராணுவ அதிகாரிகள். பாசிச அயோக்கிய பாஜக உடைய கேவலமான அரசியலால் எந்த அளவுக்கு ராணுவம் மனமொடிந்திருந்தால் இப்படி சொல்லி எழுந்து செல்வார்கள்.
தேர்தலுக்காக புல்வாமாவில் 44 ராணுவ வீரர்களை அன்றைக்கு பலி கொடுத்தோம் அதே தேர்தலுக்காக இன்றைக்கு 26 அப்பாவி பொதுமக்களை நாம் பலி கொடுத்திருக்கிறோம். இதன் பின் உள்ள உண்மை எல்லாம் ராணுவத்திற்கு தெரியாமல் இருக்குமா. அதனால்தான் உங்கள் கேவலமான தேர்தல் அரசியலுக்கு நாங்கள் ஆட்கள் இல்லை என்று எழுந்து போகிறார்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கெளரவித்த பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து கலைந்து சென்றதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ஊடகவியலாளர் மன் அமான் சிங் சினா வைரலாகும் இதே வீடியோவை பஹல்காம் தாக்குதல் நடந்த தினத்திற்கு (ஏப்ரல் 22, 2025) ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு மார்ச் 25, 2025 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
“Chief of Staff Western Command Lt Gen Mohit Wadhwa just scooted away with his senior officers after reading out a statement on the Patiala Colonel without taking any questions. The DGP also read out a statement and left but at least he has answered questions of media in recent days. What is the Army afraid of?” என்று குறிப்பிட்டு இவ்வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.
அதாவது, ஸ்டாஃப் வெஸ்டர்ன் கமாண்டின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் வாத்வா பட்டியாலா கர்னல் குறித்த அறிக்கையை படித்துவிட்டு எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் தனது மேலதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். டிஜிபிகூட அறிக்கையைப் படித்துவிட்டு வெளியேறினார். ஆனால் குறைந்தபட்சம் அவர் ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு அண்மை நாட்களில் பதிலளித்துள்ளார். ராணுவம் எதை பார்த்து பயப்படுகின்றது? என்று மன் அமான் சிங் சினா குறிப்பிட்டிருந்தார்.
வைரலாகும் வீடியோவிலும் இதுக்குறித்து அவர் கேள்வியெழுப்பி இருந்ததை காண முடிந்தது.”பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று எங்களை அழைத்தீர்கள்; அறிக்கையை மட்டும் படித்துவிட்டு நீங்கள் செல்ல முடியாது; எதை பார்த்து நீங்கள் பயப்படுகின்றீர்கள்; இராணுவம் எதை பார்த்து பயப்படுகின்றது; எதற்காக அவர்கள் ஓடுகின்றார்கள்; என்ன ஒரு அவமானம்” என்று அவர் பேசி இருப்பதை நம்மால் காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் பஞ்சாப் மாநில கட்சியான சிர்மோனி அகாலி தால் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் பிக்ரம்ஜித் சிங் மஜிதியாவும் இதே வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 25, 2025 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
கர்னல் புஷ்பிந்தர் சிங் பாத் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி வேண்டி மன் அமான் சிங் சினா கேள்வி கேட்டதுக்கு அவருக்கு சிறப்பு சல்யூட் தருவதாக அப்பதிவில் தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் பஞ்சாப் அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் மார்ச் 25, 2025 அன்று வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி மற்றொரு கோணத்தில் பதிவிடப்பட்டிருப்படட்டிருந்ததை காண முடிந்தது. பஞ்சாபின் டிஜிபி கௌரவ் யாதவ் ராணுவ அதிகாரிகளுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்ததாக இவ்வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வீடியோவின் இறுதியில் (03:26-03:34) ஊடகவியலாளர் மன் அமான் சிங் சினா கேள்வி எழுப்புவதை நம்மால் தெளிவாக கேட்க முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் இந்த பத்திரிக்கை சந்திப்பின் பின்னணி குறித்து ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
அச்செய்திகளின் வாயிலாக நமக்கு தெளிவாகியது யாதெனில், கர்னல் புஷ்பிந்தர் சிங் பாத் என்பவர் பார்க்கிங் பிரச்சனை காரணமாக அவரையும் அவரது மகனையும் 12 பஞ்சாப் போலீசார் தாக்கியதாக புகாரளித்துள்ளார். இதை தொடர்ந்து பஞ்சாப் டிஜிபியும், ராணுவ அதிகாரிகளும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இவ்வழக்கு தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
Also Read: ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து கலைந்து சென்றதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
கர்னல் புஷ்பிந்தர் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கை சந்த்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று காங்கிரசார் கூறியதாகவும், இந்திய ராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து கோபத்தில் வெளியேறியதாகவும் கூறி மேற்கண்ட அதே வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை நம்மால் காண முடிகின்றது.
இத்தகவலும் பொய்யானது என்பது மேற்கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக உறுதி செய்யப்படுகின்றது.
Sources
X post from Man Aman Singh Chhina, Journalist, Dated March 25, 2025
Instagram post from Bikram Singh Majithia, Shiromani Akal Dal (SAD), Dated March 25, 2025
YouTube video from the Government of Punjab, Dated March 25, 2025
Report from NDTV, Dated March 25, 2025
Report from The Economic Times, Dated March 25, 2025
Report from ETV Bharat, Dated March 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 30, 2025
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025